இணையம் இல்லாவிட்டால் அலுவலகச் செயல்பாடே முடங்கிவிடும் என்பதே நிதர்சனம். ஏனெனில் இணை யம் வழியாக பல தகவல் பக்கங் களை நாம் பார்வையிட்டு தகவல்களைத் திரட்ட முடியும். பல சமயங்களில் உலகளாவிய வலை் (WWW) என்பது இணையம் எனக் குறிப்பிடப்படுகிறது. ஆனால் உலகளாவிய வலை என்பதும் இணையமும் வேறு வேறு. இணையம் என்பது உலகம் எங்கும் உள்ள கணினிகளின் நெட்வொர்க்கை கேபிள்கள் மூலமாக வோ கேபிள்கள் அற்ற தொழில்நுட்பம் வழியாகவோ இணைக்கிறது. ஆனால் உலகளாவிய வலை் என்பது இணையதளப் பக்கங்களின் ஒன்றாக இணைந்த தொகுப்பு். இது இணையத்தைப் பிரபலப்படுத்த உதவும் பயன்பாடு. ஆங்கில இயற்பியல் ஆய்வாளரான சர் டிம் பெர்னர்ஸ் லீ என்பவர் உலகளாவிய வலை்யை 1989இல் கண்டறிந்தார். இணையம், உலகளாவிய வலை் ஆகியவை மின்னஞ்சல், படங்கள் முதலான ஃபைல்கள் பரிமாற்றம், வீடியோ சாட்டிங், இணையதள விளையாட்டு போன்ற பல பயன்பாடுகளை அளிக்கின்றன.
இணையம் பல பயனுள்ள விஷயங்களுக்கும் உதவுகிறது. இணையதள வர்த்தகம் விரைந்து வளர்ந்துவருகிறது. கடைக்குச் சென்று பொருள்களை வாங்கும் நிலை கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்துவருகிறது. தேவைப்படும் பொருள்களை இணையம் மூலம் வீட்டிலிருந்து பெற்றுக்கொள்ள முடியும்.
பணப் பரிமாற்றங்களும் இப்போது இணையதளம் வழியே நடைபெறுகிறது. வாடிக்கையாளர்கள் ரயில், பேருந்து பயணச் சீட்டு, திரையரங்க நுழைவுச் சீட்டு போன்றவற்றை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்கிறார்கள். மின்சாரக் கட்டணம், ஆயுள் காப்பீட்டுப் பிரிமியம் போன்றவற்றிற்குச் செலுத்த வேண்டிய தொகையையும் இணையம் வழியாகச் செலுத்த முடிகிறது.
இணையத்தை இத்தகைய செயல்களுக்குப் பயன்படுத்தும்போது நமக்கு நிறைய நேரம் மிச்சமாகிறது. இணையம் வழியே இத்தகைய கட்டணங்களைக் கட்டும் போது ரசீது தொலைந்துபோய்விடும் என்ற கவலை இல்லை. கடைசி நாளின் போதும் நள்ளிரவு 12 மணி வரை கட்டணங்களைச் செலுத்த இயலும்.
Source : Tamil Hindu
Source : Tamil Hindu
No comments:
Post a Comment