Friday, December 24, 2010

Merry Christmas and Happy New Year 2011

Google Happy Holidays Logo - கூகிள்-இன் விடுமுறை கொண்டாட்டம்

கூகிள்-இன் விடுமுறை கொண்டாட்டம் அதன் வலை தளத்திலிருந்து...

கிறிஸ்துமஸ் மற்றும் புதிய வருட பிறப்பு கொண்டாட்டங்களை பயணம் மூலம் கொண்டாட மற்றும் அந்த இடங்களின் கொண்டாட்டங்களை குறிக்கும் வகையில் கூகிள் லோகோ மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

Tuesday, December 21, 2010

Search Engine Works - தேடுபொறி விளக்கம்


தேடுபொறி ( சர்ச் என்ஜின் ) அல்லது தேடற்பொறி என்பது ஒர் Computer Program. Internet-ல் குவிந்து கிடக்கும் தகவல்களில் இருந்தோ Computer-யில் இருக்கும் தகவல்களில் இருந்தோ நமக்கு தேவையான தகவலைப்பெற உதவுகின்றது. 

பொதுவாகப் Users ஓர் Information சம்பந்தமாக தேடுதலை ஓர் சொல்லைவைத்து தேடுவார்கள். சர்ச் என்ஜின்கள் சுட்டிகளைப் பயன்படுத்தி விரைவான தேடலை மேற்கொள்ளும். சர்ச் என்ஜின்கள் என்பது பொதுவாக இன்டர்நெட் தேடுபொறிகளைஅல்லது இன்டர்நெட் தேடற்பொறிகளையே குறிக்கும். வெறுசில சர்ச் என்ஜின்கள் உள்ளூர் வலையமைப்பை மாத்திரமே தேடும். இன்டர்நெட் தேடு பொறிகள் பல பில்லியன் பக்கங்களில் இருந்து நமக்குத் தேவையன மிகப் பொருத்தமான பக்கங்களைத் தேடித் தரும்.

வேறுசில சர்ச் என்ஜின்கள் செய்திக் குழுக்கள், தகவற்தளங்கள், திறந்த இன்டர்நெட் தளங்களைப் பட்டியலிடும் DMOZ.org போன்ற இன்டர்நெட் தளங்களைத் தேடும். மனிதர்களால் எழுதப்பட்ட இன்டர்நெட் தளங்களைப் பட்டியலிடும் தளங்களைப் போன்றல்லாது சர்ச் என்ஜின்கள் Algorithm Method தேடல்களை மேற்கொள்ளும். வேறு சில சர்ச் என்ஜின்கள் தமது இடைமுகத்தை வழங்கினாலும் உண்மையில் வேறுசில சர்ச் என்ஜின்களே தேடலை மேற்கொள்ளும்.

ஆரம்ப காலத்தில் ASCII முறை கொண்டே தேடு சொற்களை உள்ளிட முடிந்தது. தற்போது Unicode எழுத்துக்குறிமுறையை பல சர்ச் என்ஜின்களும் ஆதரிப்பதால் ஆங்கிலத்தில் மட்டுமல்லாது உலக மொழிகள் அனைத்திலும் அவ்வம் மொழிப்பக்கங்களை தேடிப்பெறக்கூடியதாகவுள்ளது.

SEO Page Rank Explaination - பேஜ் தரவரிசை விளக்கம்


பேஜ் தரவரிசை (Page Rank) என்பது லாரி பேஜ் (Larry Page) என்பவரின் பெயரால் உருவான ஒரு Link method ஆகும்.
 இது உலகளாவிய வலைபோன்ற Hyperlink கொண்ட Page-களின் தொகுப்பின் ஒவ்வொரு மதிப்பிற்கும் ஒரு எண்ணிக்கை மதிப்பீட்டை வழங்கும் கூகுள் இன்டர்நெட் சர்ச் என்ஜின்-ல் பயனாகிறது. இது ஒரு தொகுப்பிற்குள் இருக்கும் relevant முக்கியத்துவத்தை "அளவிடும்" நோக்கத்திற்காகப் பயன்படுகிறது. 
இந்த பேஜ் ரேங்க்-ஐ பல வழிகளில் செய்யலாம். "பேஜ் தரவரிசை" என்னும் இந்தப்பெயர் கூகுள் இணையத்தின் வர்த்தக முத்திரையாகும்; மேலும் இந்த பேஜ் தரவரிசை தனிக் Copyrights கொண்டுள்ளது. எனினும், இந்த copyrights கூகுளுக்கு அல்லாது ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்திற்கே வழங்கப்பட்டுள்ளது. ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்திடமிருந்து இந்த தனிக் copyrights-யின் தனி உரிமத்தை கூகுள் பெற்றுள்ளது.
இந்த தனிக் copyrights பயன்பாட்டிற்காக இப் பல்கலைக்கழகம் 1.8 மில்லியன் கூகிள் பங்குகளைப் பெற்றுள்ளது; இந்தப் பங்குகள் 2005ஆம் ஆண்டில் $336 மில்லியன்களுக்கு விற்கப்பட்டன.


Monday, October 11, 2010

Brown Hat SEO Techniques - பழுப்புதொப்பி SEO நுட்பங்கள்


White Hat SEO அல்லது Black Hat அல்லாத நுட்பங்கள் Brown Hat SEO - பழுப்புதொப்பி SEO  நுட்பங்கள் என்றழைக்கப்படுகின்றன. இந்த Brown Hat SEO நுட்பங்களில் சில இரண்டு வழிகளிலும் பேசப்படுகின்றன. இந்த Brown Hat SEO நுட்பங்கள் சில அபாயங்களை அவற்றோடு கொண்டிருக்கின்றன. இந்த Brown Hat SEO நுட்பத்திற்கான ஒரு நல்ல உதாரணம், Links-களை வாங்குவதாகும். ஒரு சொல்லின் Link-கான சராசரி விலை, அந்த Page Rank - ஐ சார்ந்திருக்கும்.
Links-களை வாங்குவது, விற்பது ஆகியவற்றிற்கு கூகுள் எதிராக இருக்கிறது என்றாலும், தங்களின் வலைத்தளத்திற்கு ஒரு Link-ஐ பெறும் நோக்கத்தோடு இணைய இதழ்கள் ( இன்டர்நெட் Magazines ), உறுப்பினர்கள் மற்றும் பிற ஆதாரங்களுக்குத் தங்களைப் பதிவு செய்து கொள்பவர்களும் இருக்கிறார்கள்.
Web Masters பல்வேறு 'சிறிய-தளங்களை' உருவாக்குவதென்பது, பரவலாக பயன்படுத்தப்பட்ட மற்றொரு Brown Hat SEO நுட்பமாகும், இதில் இலக்கில் இருக்கும் தளத்திற்குக் Cross Links அளிப்பதற்காகவே Webmaster இந்த 'மைக்ரோ-Website' கட்டுப்படுத்துகிறது. எல்லா மைக்ரோ-தளங்களுக்கும் ஒரே உரிமையாளர் என்பதால், இது Search Engine-களின் படிமுறைகளின் கோட்பாட்டை மீறுவதாகும், இருப்பினும் Search Engine-களால் அந்த தளங்களின் உரிமையாளர்களைக் கண்டறிய முடிவதில்லை, கண்டறிவதென்பது சாத்தியப்படுவதே இல்லை என்பதால், குறிப்பாக பிரத்யேக மூன்றாம் வகுப்பு IP-க்களைப் பயன்படுத்தும் போது, அவை வெவ்வேறு Website-களாக காணப்படும்.

Wednesday, October 6, 2010

SEO-இல் வெண்தொப்பி( White Hat SEO ) மற்றும் கருந்தொப்பி ( Black Hat SEO )

SEO தொழில்நுட்பங்கள் இரண்டு பிரிவுகளின் கீழ் பிரிக்கப்படுகின்றன: 
  1. White Hat SEO - நல்ல வடிவமைப்பின் பாகமாக சர்ச் என்ஜின்கள் பரிந்துரைக்கும் நுட்பங்கள்
  2. Black Hat SEO - சர்ச் என்ஜின்கள் அங்கீகரிக்காத நுட்பங்கள். 


சர்ச் என்ஜின்கள் இரண்டாவதாக கூறப்பட்டதன் விளைவுகளைக் குறைக்க முயற்சிக்கின்றன, இதில் தரவுமோசடியும் உள்ளடங்கும். இந்த SEO தொழில்துறையின் சில விமர்சகர்களும், இந்த முறைகளைப் பயன்படுத்தி வரும் வல்லுனர்களும், இந்த முறைகளை வெண்தொப்பி SEO (white hat SEO) மற்றும் கருந்தொப்பி SEO (black hat SEO) என்று பகுத்திருக்கிறார்கள். 
வெண்தொப்பிகள் White Hat SEO நீண்ட காலத்திற்கு தொடர்ந்து Search முடிவுகளை அளித்து கொண்டிருக்கும், ஆனால் கருந்தொப்பிகளானது Black Hat SEO, தாங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்பதை சர்ச் என்ஜின்கள் கண்டறிந்த உடனேயே தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ தங்களின் தளங்களைத் தடுப்பதை எதிர்க்கின்றன.


வெண்தொப்பி White Hat SEO :


சர்ச் என்ஜின்-ல் வழிகாட்டி நெறிமுறைகளுக்கு உட்பட்டு இருந்தால், எவ்வித மோசடியும் கொண்டிருக்காமல் இருந்தால் அந்த SEO நுட்பம் வெண்தொப்பி( White Hat SEO ) என்று கருதப்படும். சர்ச் என்ஜின் வழிகாட்டிநெறிகள், விதிகளின் அல்லது கட்டளைகளின் தொகுப்பாக எழுதப்பட்டிருக்கவில்லை என்பதால், இது மிகவும் உன்னிப்பாக கவனிக்க வேண்டிய ஒரு விஷயமாக இருக்கிறது.


White Hat SEO வழிகாட்டிநெறிகளைப் பின்பற்றுவதோடு மட்டுமில்லாமல், ஒரு சர்ச் என்ஜின் பட்டியலிடும் உள்ளடக்க தரவுகளும் மற்றும் அதன் விளைவாக Ranking-களும் ஒரே Index  தரவுகள் தான், அது தான் பார்வையாளருக்கு கிடைக்கிறது என்பதை உறுதிப்படுத்தும். 


White Hat SEO ஆலோசனை பொதுவாக சர்ச் என்ஜின்களுக்காக அல்லாமல், User-களுக்கான உள்ளடக்க தரவுகளை உருவாக்க தொகுக்கப்படுகிறது, பிறகு அதன் தேவைக்கேற்ற பயன்களில் இருந்து படிமுறையை ஏமாற்றும் முயற்சியாக அல்லாமல், மாறாக இது Bot-களால் எளிதாக அணுகப்படும் வகையில் அமைக்கப்படுகிறது. 


White Hat SEO மற்றும் வலைத்தள உருவாக்கும் இரண்டும் ஒன்றில்லை என்றாலும் கூட, White Hat SEO பல வழிகளில் அணுகுதலை ஊக்குவிக்கும் வலைத்தள உருவாக்கத்தைப் போலவே 
அமைந்திருக்கிறது.


கருந்தொப்பி Black Hat SEO:


Black hat SEO, சர்ச் என்ஜின்களால் மறுக்கப்பட்ட, அல்லது மோசடிகளை உள்ளடக்கியவற்றை சில வழிகளில் Ranking-ல் முன்னுக்கு கொண்டு வர முயற்சிக்கிறது. மறைக்கப்பட்ட சொற்களை, அதாவது பின் நிறத்தைப் போலவே நிறமிடப்பட்ட எழுத்துக்களைப் பயன்படுத்தியோ அல்லது ஒரு கண்ணுக்கு புலனாகாத div மூலமாகவோ, அல்லது திரை அணைக்கப்பட்ட நிலையிலேயோ எவ்வகையிலேனும் மறைக்கப்பட்ட சொற்களை Black Hat SEO நுட்பம் பயன்படுத்துகிறது. 


ஒரு பயனராலோ அல்லது ஒரு சர்ச் என்ஜினாலோ கோரப்பட்ட பக்கத்தைப் போன்ற வேறொரு பக்கத்தைக் கொடுக்கும் மற்றொரு முறையும் இருக்கிறது, இந்த நுட்பம் cloaking என்று அழைக்கப்படுகிறது.
Black Hat SEO முறையைப் பயன்படுத்தும் வலைத்தளங்களைக் கண்டறிந்தால், சர்ச் என்ஜின்கள் தங்களின் Ranking-ல் இருந்து அவற்றை குறைமதிப்பிட்டோ அல்லது ஒட்டுமொத்தமாக தங்களின் தரவுக்களஞ்சியத்தில் இருந்து அவற்றின் பட்டியலை நீக்கியோ அவற்றை தண்டிக்கும். இதுபோன்ற தண்டனைகள் சர்ச் என்ஜின்களின் படிமுறைகளால் தன்னிச்சையாக செய்யப்படும், அல்லது ஒரு தானியங்கியல்லாத வலைத்தளத்தைப் பார்வையிடுவதம் மூலமாக செய்யப்படும். மோசடி பயிற்சிகளைப் பயன்படுத்தியதற்காக BMW ஜெர்மனி மறும் Ricoh ஜெர்மனி ஆகியவற்றை கூகுள் பிப்ரவரி 2006-ல் நீக்கியது, மற்றும் PPC ஏஜென்சி BigMouth மீடியாவை 2006 ஏப்ரலில் நீக்கியது ஆகியவை சில பிரபலமாகாத எடுத்துக்காட்டுகளாகும். ஆனால், இந்த மூன்று நிறுவனங்களுமே உடனடியாக வருத்தம் தெரிவித்து, தங்களின் பக்கங்களைச் சரி செய்து கொண்டன என்பதால், அவை மீண்டும் கூகுள் பட்டியலில் இடம் பெற்றன.

Thursday, September 30, 2010

SEO-இல் சர்ச் என்ஜின்களுக்கான தொடர்பு - Search Engine part in SEO


1997-வாக்கில், சர்ச் என்ஜின்-களின் Page Rank-ல் முதன்மை இடத்தைப் பிடிக்க Website-கள் பெரும் முயற்சிகள் எடுத்து வருவதை Search Engines கண்டுகொண்டன, மேலும் சில வெப்சைட்கள் பொருத்தமில்லாத அல்லது நிறைய Keyword-களை அவற்றின் பக்கங்களில் திணித்து Search Engine அளிக்கும் பட்டியல் முடிவுகளையும் கூட குழப்பிவிடுகின்றன என்பதையும் Search Engine-கள் அறிந்துகொண்டன. Website-களால் Ranking சீர்குலைக்கப்படுவதைத் தடுக்கும் ஓர் முயற்சியில், Infoseek போன்ற ஆரம்பகால Search Engine-கள் அவற்றின் Algorithm மற்றும் method-களை மாற்றி அமைத்தன.

SEO மார்க்கெட் விளைவுகள்:
சர்ச் என்ஜின்-கள் அளிக்கும் முடிவுகளின் மார்க்கெட் மதிப்பு அதிகரித்ததன் காரணமாக, சர்ச் என்ஜின்-களுக்கும், Search Engine Optimizer-களுக்கும் இடையில் ஒரு விளம்பரதார உறவு ஏற்படுவதற்கான சூழ்நிலைகள் உருவாயின. தீவிரமாக இருக்கும் இணைய Database தரவு வழங்குனர்களின் நாசப்படுத்தும் விளைவுகளைக் குறைக்கவும், அது குறித்து விவாதிக்கவும், 2005-ல், AIRWeb, அதாவது Adversarial Information Retrieval on the Web என்றவொரு ஆண்டு மாநாடு உருவாக்கப்பட்டது.

தீவிர நுட்பங்களைப் பயன்படுத்தும் SEO நிறுவனங்களின் வாடிக்கையாளர் Website-கள் Search Engine அளிக்கும் முடிவு பட்டியலில் இருந்து நீக்கப்பட்டன. அதிக-அபாயகரமான நுட்பங்களைப் பயன்படுத்தியதுடன், தங்கள் வாடிக்கையாளர்களுக்கும் அது குறித்து விளக்கம் அளிக்காத Traffic Power என்ற ஒரு நிறுவனத்தைப் பற்றி 2005-ல் Wall Street Magazine செய்தி வெளியிட்டது. இந்த தடை குறித்து எழுதியதற்காக வலைப்பதிவர் மற்றும் SEO (Aronn Wall) ஆரோன் வால் மீது அதே நிறுவனம் வழக்கு தொடுத்ததாக Wired இதழ் செய்தி வெளியிட்டது. Traffic Power மற்றும் அதன் சில வாடிக்கையாளர்களைக் கூகுள் நீக்கிவிட்டதாக கூகுளின் மாட் கட்ஸ்(Matt Cutts) பின்னர் உறுதிப்படுத்தினார்.

சில சர்ச் என்ஜின்-களும் SEO தொழில்துறையில் களம் இறங்கின, மேலும் அவை SEO மாநாடுகள், கலந்துரையாடல்கள் மற்றும் கருத்தரங்குகளுக்கு அடிக்கடி விளம்பரதாரர்களாகவும், அவற்றின் பார்வையாளர்களாகவும் இருந்தன. உண்மையில், கட்டணம் செலுத்தும் முறையில் ஆதாயத்தால், சில சர்ச் என்ஜின்கள் இப்போது SEO சமூகம் நிலைத்திருப்பதில் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றன. 

Google-இன் பங்கு: 
பெரும்பாலான சர்ச் என்ஜின்கள் வெப்சைட் SEOக்கு உதவும் வகையில் வழிகாட்டுதல்களையும், தகவல்களையும் அளித்து வருகின்றன. வெப்சைட்- ஐ  கூகுளில் பட்டியலிடுவதில் ஏதேனும் பிரச்சனை இருந்தால், வெப் மாஸ்டர்களுக்கு உதவும் வகையில் அதுவொரு SEO webmaster blog  திட்டத்தையும் கொண்டிருக்கிறது, மேலும் அந்த வெப்சைட்-கு கூகுள் algorithm பற்றிய தகவல்களையும் அது அளிக்கிறது. வெப் மாஸ்டர்களுக்கு கூகுள் அளித்த வழிகாட்டு ஆலோசனை பயிற்சிகளின் ஒரு தொகுப்பு தான் கூகுளின் வழிகாட்டு நெறிமுறைகளாகும். 

Yahoo! இன் பங்கு: 




யாகூ! வெப்சைட் சுட்டியானது, வெப்சைட் அண்ட் வேப் மாஸ்டர்  முகவரிகளை அளிக்கவும், யாகூ! பட்டியலில் எத்தனை பக்கங்கள் இருக்கின்றன என்பதை வரையறுக்கவும், Links விபரங்களைப் பார்வையிடவும் வெப் மாஸ்டர்களுக்கு ஒரு வழியை அளிக்கிறது.

Wednesday, September 29, 2010

Google SEO Starter Guide ( Updated ) - கூகிள்-இன் SEO விளக்க புத்தக்கம்

கூகிள்-இன் SEO விளக்க உரை :


Googlebotஇரண்டு வருடத்திற்கு முன்பு கூகிள் SEO விளக்க புத்தகத்தை வெளியிட்டுள்ளது. அந்த SEO கைடு 40 மொழிகளில் அறிமுக படுத்த பட்டுள்ளது.


இப்போது அந்த SEO கைடு புதிய மாற்றம் செய்து வெளியுட்டுள்ளது.   இதில் இன்னும் அதிகமான விளக்க உரைகளுடன், அதிக வழிமுறைகளுடனும் வெளியுட்டுள்ளது.


புதிய SEO விளக்க உரைகளுக்கு இங்கு கிளிக் செய்யவும்.



Tuesday, September 28, 2010

Search Engines Importance for SEO Growth - சர்ச் என்ஜின்களின் முக்கியத்துவம்


கூகிள்(Google) முக்கியத்துவம்: 
Google.png
ஸ்டேன்போர்டு பல்கலைக்கழக பட்டதாரி மாணவர்களான Larry Page மற்றும் Sergey brin இருவரும் "பேக்ரப்" (backrub) என்பதை உருவாக்கினார்கள், இது Web Page-களின் முக்கியத்துவத்தின் அடிப்படையில் வரிசைப்படுத்தும் ஒரு கணித Method சார்ந்த தேடுபொறியாகும். 

Page Rank : 

Page Rank என்ற Method கணக்கிடப்பட்ட எண்ணிக்கை, அவற்றில் இருக்கும் Link-களின் தரம் (Quality) மற்றும் வலிமையின் (Strength) செயல்பாட்டைப் பொறுத்திருக்கும். வலையகத்தில் மாறி மாறி உலாவி வரும் ஒரு வலை பயனரால் விரும்பப்படும் ஒரு பக்கத்தை இந்த Page Rank மதிப்பிடுகிறது, பிறகு ஒரு பக்கத்தில் இருந்து மற்றொரு பக்கத்திற்கு திரிகளைத் தொடர்ந்து செல்கிறது. 
நடைமுறையில், ஒருசில திரிகள் மற்றவற்றைவிட வலுவாக இருக்கின்றன என்பதையும், Page Rank-ல் முதன்மை பெற்ற பக்கம் வலை பயனரால் மாறிமாறி உலாவும் போது அப்பக்கம் அதிகளவில் எட்டப்பட்டிருந்தது என்பதையுமே இது குறித்தது.
Page மற்றும் Brin 1998-ல் கூகுளை உருவாக்கினார்கள். வளர்ந்து வந்த இணைய பயனர்கள் மத்தியில் Google பெரும் வரவேற்பைப் பெற்றது, இவர்கள் கூகுளின் எளிமையான வடிவமைப்பை விரும்பினார்கள்.
வலைப்பக்கத்தில் இருக்கும் Factor-களை மட்டும் கருத்தில் கொண்டு தங்களின் Ranking Method-களை அமைத்து கொண்டிருந்த Search Engine-களில் இருந்த குழப்பங்களைத் தவிர்க்க கூகுள், வலைப்பக்கத்தில் இருக்கும் Factor-களுடன் (Keyword-ன் பயன்பாட்டு எண்ணிக்கை, Important சொற்கள், Title, Links மற்றும் Website Structure போன்றவை) வலைப்பக்கத்தில் இல்லா காரணிகளையும் (Page Rank மற்றும் Link Structure போன்றவை) சேர்த்து கொண்டது.
Page Rank மிகவும் சிக்கலானது என்ற போதினும், வலைத்தலைமைகள் ஏற்கனவே Link உருவாக்கும் கருவிகளையும், Inktomi Search Engine-யில் ஆதிக்கம் செலுத்தும் திட்டங்களையும் (schemes) உருவாக்கிவிட்டிருந்தார்கள், இந்த முறைகள் Page Rank  விளையாட்டைப் போலவே அதனோடு பொருந்தி வந்தது. 
பல வலைத்தளங்கள் Links-களை வாங்குவதும், பரிமாறி கொள்வதும்(Link Exchange) , விற்பதுமாக(Link Selling) இருந்தன, அதுவும் இது பெரும் அளவில் அதிகமாக நடந்து கொண்டிருந்தது. இந்த திட்டங்கள் அல்லது Link Method-களில் சில, முழுமையாக Link Fraud மோசடிக்காகவே ஆயிரக்கணக்கான Websites உருவாக்குவதில் ஈடுபட்டன.
2004-ல், Link Fraud மோசடிகளின் விளைவுகளைக் குறைப்பதற்காக Search Engines அவற்றின் Page Rank முறையில் பல்வேறு வெளியிடப்படாத Formula and Algorithms உள்ளடக்கி இருந்தன. 200-க்கும் மேற்பட்ட Algorithms- ஐ பயன்படுத்தி வலைத்தளங்களைப் பட்டியலிடுவதாக கூகுள் தெரிவிக்கிறது.
கூகுள் மற்றும் யாகூ போன்ற முன்னணி Search Engines, வலைப்பக்கங்களைப் பட்டியலிடுவதற்கு அவை பயன்படுத்தும் Algorithm-களை வெளியிடுவதில்லை. .
SEO பயிற்சியாளர்களும் Algorithm-களின் தெரிந்து கொள்வதற்காக பல்வேறு Search Engines Methods-களை  ஆய்வு செய்கின்றன.

 Bruce Clay கூற்று: 


2005-ல், கூகுள் ஒவ்வொரு பயனருக்கும் ஏற்ப தேடு முடிவுகளைப் பிரத்யேகப்படுத்த ஆரம்பித்தது. பயனர்களின் முந்தைய தேடல்களின் வரலாற்றை அடிப்படையாக கொண்டு, உள்நுழைந்திருக்கும் பயனருக்கான முடிவுகளை வரையறுத்தது.
பிரத்யேக தேடுதல் வந்துவிட்டதன் காரணமாக "Ranking முறை செத்துவிட்டது" என்று 2008-ல் Bruce Clay தெரிவித்தார். ஒவ்வொரு Users-கும், ஒவ்வொரு தேடலின் போதும் பட்டியிலில் ஒரு வலைத்தளத்தின் மதிப்பு வேறுவேறாக இருக்கும் என்பதால், ஒரு வலைத்தளம் எவ்வாறு பட்டியலிடப்படுகிறது என்று விவாதிப்பது அர்த்தமற்றது என்று அவர் தெரிவித்தார்.
Page Rank-ஐ பரிமாறும் Paid Links-களுக்கு எதிராக 2007-ல் கூகுள் ஓர் அறிவிப்பை வெளியிட்டது. Links-களில் பின்தொடரகூடா பண்புகளைப் (No follow attibute) பயன்படுத்தி, Page Rank வடிவமைப்பில் விளைவுகளைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக 2009 ஜூன் 15-ல் கூகுள் அறிவித்தது. 

Matt Cutts Page Rank Algorithm : 


கூகுளின் பிரபல மென்பொருள் வல்லுனரான Matt Cutts, Page Rank Algorithm செய்வதற்காக SEO-க்கள் No-Follow Attibute பயன்படுத்துவதைத் தடுப்பதற்காக, கூகுள் போட் (Google Bot) இனி no-followed links அதே முறையில் கையாள போவதில்லை என்று அறிவித்தார். 
இந்த மாற்றத்தின் விளைவாக, No-Follow Attibute பண்பின் பயன்பாடு Page Rank-ன் மறைவிற்கு இட்டு செல்கிறது. இதை தடுப்பதற்காக, SEO-க்கள் மாற்று நுட்பங்களை உருவாக்கினார்கள், அது no followed tags பதிலாக குழப்பும் javascript-ஐ பயன்படுத்தும், இதனால் Page Rank Structure தொடர்ந்திருக்கும். இதுதவிர, iframes, flash மற்றும் javascript பயன்படுத்துவது உட்பட பல்வேறு தீர்வுகளும் பரிந்துரைக்கப்பட்டன. 

Search Engine History:
தேடுபொறி முடிவுகளை மேலும் சிறப்பமைக்க தமது அனைத்து User-களின் Search Engine History பயன்படுத்தப் போவதாக டிசம்பர் 2009-ல் கூகுள் அறிவித்தது.

Real Time Search Results : 




Search Engine Algorithm முடிவுகளில் குறுகிய காலத்தில், பொருத்தமானதைப் பெறச் செய்யும் ஒரு முயற்சியில் 2009-ன் பின்பகுதியில் Real-time-search என்பது அறிமுகப்படுத்தப்பட்டது. அனுபவம் வாய்ந்த Web Experts,  Search Engine Rank-ல் ஒரு website- ஐ முன்னிலைக்கு கொண்டு வர, பல மாதங்கள் அல்லது பல ஆண்டுகள் கூட துல்லியப்படுத்தலில் செலவிட்டார்கள். 
Social Networking Websites மற்றும் Social Media வளர்ச்சியால், Search Engine Result-களுக்குள் புதிய Database-களையும் விரைவாக list செய்யும் வகையில் முன்னணி Search Engines தங்கள் Method-ல் மாற்றத்தை ஏற்படுத்தின. 
இந்த புதிய மாற்றங்கள் சர்ச் என்ஜின்-இல் முடிவுகளை விரைவாக தரவும் துல்லியமாக தரவும் முடிகிறது. 

Monday, September 27, 2010

கூகிள் 12 -ஆம் ஆண்டு பிறந்த நாள் - Google 12th Birthday

இன்று(27-09-2010),


 12 -ஆம் ஆண்டு  பிறந்த நாள் வாழ்த்துக்கள் - கூகிள் ( Google




Happy 12th Birthday Google by Wayne Thiebaud. Image used with permission of VAGA NY.





வாழ்த்துக்களுடன்,


அப்துல் மாலிக் 

History of Google - கூகிள் உருவான கதை மற்றும் வரலாறு

Google.png


தொடக்கம் : மென்லோ பார்க்,கலிபோர்னியா


தொடங்கிய ஆண்டு : செப்டம்பர் 7 1998


தலைமையகம் : மவுன்டன் வியூ,கலிபோர்னியா,ஐக்கிய அமெரிக்கா


டைரக்டர் எரிக் ஷ்மித் ( Eric Schmidt- CEO ) 



தொழில்நுட்ப தலைவர் : சேர்ஜி பிரின் ( Sergey Brin )  மற்றும் லாரி பேஜ் ( Larry Page ) 


 


தொழில்துறை : இணையம் ( Internet),மென்பொருள் ( Software Products) 




Google கூகிள் வரலாறு : 



கூகிள் 1996ம் வருடம் சனவரி மாதம், லாரி பேஜ் (Larry Page) மற்றும் அவரது சக மாணவரான சேர்ஜி பிரின் ( Sergey Brin ) என்பவரும் தங்கள் Ph.D. பட்டப் படிப்பிற்காக கலிபோர்னியாவிலுள்ள ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தினால் (Stanford University) வழங்கப்பட்ட ஆராய்ச்சிக்கான தலைப்பின் (இணையங்கள் இடையிலான கணித தொடர்பு முடிவில் தோன்றியதாகும். 
ஆரம்பத்தில் லாரி பேஜின் மட்டுமே இதில் இருந்த போதிலும் வெகு விரைவிலேயே சக மாணவரும் நெருங்கிய நண்பருமான சேர்ஜி பிரின் இணைந்து கொண்டார். இவர்கள் இருவரும் தமது ஆய்வை இணைய Search Engine -கான ஒரு ஆய்வாக முன்னெடுத்தனர். 
இவர்கள் தாம் சேகரித்த தகவல்களின்படி Search Engine -ல் தேடப்படும் Information எந்த இணைய பக்கங்களில் உள்ளது என்பதையும் அதன் தொடர்புகளையும் அலசி ஆராய்ந்து Search Results பட்டியலிடுவதே சிறந்த முறை எனவும் முடிவு செய்தனர். இந்த முறையே சிறப்பான தொழில் நுட்பம் என்பதில் நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தார்கள். இவர்கள் தமது ஆராய்ச்சிக்கு புனைபெயராக பாக்ரப்("BackRub") என்ற பெயரை சூட்டியிருந்ததுடன் இந்த ஆய்வு ஒரு இணையத்தின் பின்புல (backlinks) இணைப்புகளுடன் முக்கிய பங்குவகிப்பதனால் அவ்வாறு அர்த்தத்தில் குறிப்பிடனர். 
 இவர்கள் ஆய்வை மிகவும் ஒத்த விதத்தில் தேடு பதிலாலை கொடுப்பத்ற்கு அந்த காலகட்டத்தில் சிறிய சர்ச் என்ஜின் ராங்டெக்ஸ்(RankDex) வேலைத் திட்டத்தில் இறங்கியும் இருந்தது குறிப்பிடத் தக்கதாகும்.
இந்த ஆராச்சி ஸ்ரான்பேஃர்ட் பல்கலைக்களக பட்டப் படிப்புடன் சம்பந்தமான ஆராச்சி என்பதால் தமது விதிகளை அங்கு பரீட்சித்தும் பார்த்ததோடு கூகிள் தோன்றவும் அடிகோலினர். 
ஆரம்பத்தில் ஸ்ரான்போர்ட் பல்கலைக்கழகத்தின் இணையப் பக்கங்களை தேடுவதற்காக google.stanford.edu என்ற பெயர் பாவிக்கப்பட்ட போதிலும் பின்னர் கூகிள்.கொம்(google.com) என 1997ம் ஆண்டு செப்ரம்பர் 15ம் நாள் பதிவு செய்யப்பட்டதுடன் 1998 செப்ரம்பர் 15ம் நாள் கூகிள் தனியார் நிறுவனமாகவும் பதியப்பட்டது.
 1998 செப்ரம்பர் 7இல் நண்பர் ஒருவரின் Car Shed- ல் கூகிள் வர்த்தக நோக்குடன் ஆரம்பிக்கப்பட்டது. புதிய நிறுவனத்திற்கு முதலிடுவதில் பலரையும் அணுகி ஒரு வழியாக இறுதியில் 1.1மில்லியன் டொலர்களை சேர்த்து கொண்டனர்.
கூகோல் என்பதன் அர்த்தம் 1 ஐ தொடர்ந்து வரும் 100 பூச்சியங்கள் கொண்ட எண்ணைக் குறிக்கும் பெயராகும். ஆனால், அது Silicon Valley பொறியியலாளர் ஒருவரால் ஏற்கனவே பதிவுசெய்யப்பட்டிருந்ததுடன் அந்தபெயரை அவர் அப்போது விட்டுக் கொடுக்கவும் சம்மதிக்கவில்லை. எனவே, இவர்கள் தமது நிறுவனத்திற்கு தீவிரமாக பெயர் தேடும் போது தவறுதலாக தட்டச்சு ( Typo Error )  செய்தபோது பிறந்ததே "கூகிள்" என்ற புதிய சொல். 
கூகிள் தனது எளிமையான தேடி மூலமாக அடிக்கடி உபயோகிக்கும் இணைய பாவனையாளர்களுடன் புதிது புதிதாகவும் பலரையும் கவரத் தொடங்கியது. 
ஒத்த விளம்பரத்தினை இணையத் தளங்களில் காண்பிக்கும் நுட்பமானது Goto.com என்ற நிறுவனமே முன்னோடிகளாக இருந்தார்கள். Goto.com என்ற இதன் பெயர் (Overture Services) ஆகவும் பின்நாளில் YAHOO! இனால் கொள்முதல் செய்யப்பட்டு Yahoo! Search Marketing ஆயிற்று. கூகிளுடன் போட்டி ஆகி இருந்த பல நிறுவனங்களும் தோற்று விட "கூகிள்" லாபமீட்டுவதுடன் உறுதியாக வெற்றியீட்டி வருகிறது.
ஆரம்பத்தில் "கூகோல்" (googol) என்பது அதன் அர்த்தம் கண்டு விரும்பப் பட்ட போதிலும் எழுத்துப் பிழைகளுடனான "கூகிள்" என்பது மிக பிரபலம் ஆயிற்று.

Saturday, September 25, 2010

SEO வரலாறு - Search Engine and Ranking Algorithms உருவான முறை


SEO வரலாறு -  Search Engine and Ranking Algorithms உருவான முறை:


Search Method-களின் ஆரம்பகால பதிப்புகள், Keyword-ன் முதன்மை சொல், அல்லது ALIWEB போன்ற Engine-களில் இருந்த உள்ளடக்க கோப்புகள் வலைத்தலைமை அளித்த தகவலின் அடிப்படையிலேயே அமைந்திருந்தன. Keyword முதன்மை சொல் ஒவ்வொரு பக்கத்தின் உள்ளடக்கத் DATA குறித்தும் ஒரு வழிகாட்டுதலை வழங்கும். ஆனால் பக்கங்களைப் பட்டியலிட முதன்மை DATA பயன்படுத்துவதில், நம்பகத்தன்மை குறைந்து காணப்பட்டது, ஏனென்றால் முதன்மை சொல்லில் இருக்கும் வலைதலைமையின் Keywords தேர்வு, வலைத்தளத்தில் இருக்கும் உள்ளடக்க DATA-உடன்  துல்லியமாக பொருந்துவதாக இருக்காது. 
முதன்மை சொற்களில் இருக்கும் துல்லியமில்லாத, முழுமையில்லாத, மற்றும் பொருத்தமில்லாத Data-ஆனது , பக்கங்களை தேடுதலுக்கு ஒத்த rank-களில் கொண்டு வராது அல்லது கொண்டு வராமல் செய்ய கூடும். 
Website உள்ளடக்க தரவு வழங்குனர்களும், search engine-களின் வரிசைப்படுதலில் சிறந்த இடத்தைப் பிடிக்கும் முயற்சியில் ஒரு பக்கத்தில் இருக்கும் HTML Coding-களில் சூழ்ச்சி செய்தார்கள்.
ஒரு வெப் சர்வர்-ன் பிரத்யேக கட்டுப்பாட்டில் இருக்கும் குறிச்சொற்களின் எண்ணிக்கை போன்ற நிறைய காரணிகளோடு சம்பந்தப்பட்டதால், ஆரம்பகால சர்ச் என்ஜின் பல்வேறு தவறான கையாளுகைகளாலும், ranking குழப்பங்களிலும் மாட்டி கொண்டிருந்தது. தங்களுடைய பயனர்களுக்கு சிறந்த முடிவுகளை அளிப்பதற்காக, கொள்கையில்லாத வெப் சர்வர்களால் எண்ணிறைந்த Keyword-களுடன் வரும் பொருத்தமில்லாத பக்கங்களைக் காட்டாமல், மிகவும் பொருத்தமான தேடுதல் Result-களே  தங்கள் முடிவு பக்கங்களில் வரும் என்பதை உறுதிப்படுத்த வேண்டிய நிலைக்கு சர்ச் என்ஜின்கள் தள்ளப்பட்டன. 
தேடுபொறிகள் அளிக்கும் முடிவுகள் தவறாக இருந்தால், பயனர்கள் வேறு தேடுதளங்களுக்கு சென்று விடுவார்கள் என்பதால், கொடுக்கப்பட்ட எந்த தேடுதலுக்கும் மிகவும் பொருத்தமான முடிவுகளைத் தருவதில் தான் ஒரு சர்ச் என்ஜின்-யின் வெற்றி மற்றும் அதன் பிரபலத்தன்மை அடங்கி இருக்கிறது. இதனால் வெப் சர்வர்களின் மோசடியை மிகவும் கடினமாக்கும் வேறுசில கூடுதல் காரணிகளைக் கணக்கில் எடுத்து, சர்ச் என்ஜின்கள் மிகவும் சிக்கலான Ranking Algorithms-ஐ  உருவாக்கின.


Friday, September 24, 2010

History of Search Engine Optimization - SEO வரலாறு


SEO வரலாறு : 
1990-களின் மத்தியில் சர்ச் என்ஜின் - Webmasters, உள்ளடக்க Data வழங்குனர்களும் வெப்சைட்களை துல்லியப்படுத்த ஆரம்பித்தார்கள். ஆரம்பகால சர்ச் என்ஜின் முன்னால் உருவாக்கப்பட்ட வெப்சைட்களை முன்னால் பட்டியலிட்டு வந்தன.


தொடக்கத்தில், ஒரு வெப்சைட் ஒரு பக்கத்தின் முகவரியை, அல்லது வலைத்தள முகவரியை பல்வேறு சர்ச் என்ஜின்-களுக்கு அனுப்ப வேண்டியதிருந்தது, அவை அந்த பக்கத்தைப் பார்வையிடவும், அதிலிருந்து பிற பக்கங்களுக்கான இணைப்புகளைப் பிரித்தெடுக்கவும் ஒரு spider அனுப்பின, மேலும் அந்த பக்கத்தை Data Base-இல்  சேர்க்க அந்த பக்கத்தில் காணப்பட்ட தகவலை திருப்பி அனுப்பின. இந்த செயல்முறையில், ஒரு சர்ச் என்ஜின்-ன் spider ஒரு பக்கத்தைப் டவுன்லோட் செய்து, சர்ச் என்ஜின்-ன் சர்வரில் சேமித்து வைக்க வேண்டிய அவசியத்தை ஏற்படுத்தி இருந்தது.


மேலும் இவ்வாறு சேமித்து வைக்கப்படும் இடத்தில், indexer எனப்படும் மற்றொரு Index, இந்த பக்கத்தில் இருந்து பல்வேறு தகவல்களைப் பிரித்தெடுக்கும், அதாவது அதில் இருக்கும் வார்த்தைகள் மற்றும் இவை எங்கே இடம் பெற்றிருக்கின்றன என்ற தகவல்கள், அத்துடன் குறிப்பிட்ட வார்த்தைக்கு வேறேதேனும் முக்கியத்துவம் உண்டா என்ற தகவல்கள், மற்றும் பிந்தைய தேதியில் பார்ப்பதற்காக ஒரு scheduler -இல் போடப்படும் அந்த பக்கத்தின் ஏனைய இணைப்புகள் போன்றவற்றைப் பிரித்தெடுத்து சேமித்து வைக்கும்.


வெப்சைட் உரிமையாளர்கள் தங்களின் தளங்கள் உயர்ந்த மதிப்பீட்டையும், சர்ச் என்ஜின் அளிக்கும் முடிவுகளிலும் இடம் பெற வேண்டியதன் மதிப்பையும் உணரத் தொடங்கினார்கள்.


SEO வல்லுனரான டேனி சுலிவன் கருத்துப்படி, தேடல் பொறி உகப்பாக்கம் (Search Engine Optimization) என்ற இந்த வார்த்தை 1997-ல் பயன்பாட்டிற்கு வந்தது.

Thursday, September 23, 2010

தேடல் பொறி உகப்பாக்கம் விளக்கம் - Search Engine Optimization (SEO) Explanation

தேடல் பொறி உகப்பாக்கம் (SEO ) என்பது Search Engine வழியாக ஒரு வெப்சைட்    அணுகப்படும் எண்ணிக்கையை அல்லது அணுகுதலின் தரத்தை மேம்படுத்துவதற்கான செயல்முறையாகும், 


கட்டணம் வசூலிக்கும் தேடுபொறி மார்க்கெட்டிங் (Search Engine Marketing - SEM) மாற்றாக, "இயல்பான" அல்லது கட்டணம் வசூலிக்காத ("ஆர்கானிக்" அல்லது "படிமுறை" முறையிலான) தேடல் முடிவுகளை வழங்குவதன் மூலமாக இது செயல்படுகிறது. 


அடிப்படையில், தேடுபொறிகள்(Search Engine) அளிக்கும் வலைத்தள பட்டியலில் முதலில் தோன்றும் வலைத்தளமே பெரும்பாலான பார்வையாளர்களைப் பெறும். 


SEO நுட்பமானது, குறிப்பாக புகைப்படத்தேடல்(Image Search), உள்நாட்டு தேடல்(Local Search), ஒளிக்காட்சித் தேடல்(Video Search) மற்றும் தொழில்துறை-சார்ந்த சிறப்பு தேடுபொறிகள் போன்றவை உள்ளடக்கிய பல்வேறு விதமான தேடுதல்களை இலக்காக கொண்டிருக்கலாம். இது ஒரு வலைத்தளத்திற்கு வலையில் இருப்பதற்கான இருப்பை ஆழப்படுத்துகிறது. 


"SEO" என்ற சுருக்கெழுத்துக்கள் " தேடல்(Search) பொறி(Engine) உகப்பாக்கிகளைக்(Optimization)" குறிக்கிறது, 


இந்த சொல், வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப உகப்பாக்கத் திட்டங்களைச் செய்யும் தொழில்துறை ஆலோசகர்களாலும், இந்த SEO சேவைகளைச் செய்துவரும் பணியாளர்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. 


SEO Webmasters இந்த SEO சேவையை ஒரேயொரு தனிச்சேவையாகவோ அல்லது ஒரு பரந்த Marketing உத்தியின் ஒரு பாகமாகவோ அளிக்கிறார்கள். ஏனென்றால் துல்லியமான ஒரு SEO சேவைக்காக வலைத்தளத்தின் HTML Program - மாற்றி அமைக்க வேண்டியதிருக்கும், SEO உத்திகளானது, வலைத்தள உருவாக்கம்(Website Design) மற்றும் வடிவமைப்பு (Development) ஆகியவற்றுடனும் உள்ளடங்கி இருக்கிறது. 


"தேடுபொறிக்கு உகந்தது(Search Engine Friendly)" என்ற இந்த வார்த்தையானது, தேடுபொறியை முழுமையாக பயன்படுத்தும் நோக்கத்திற்காக துல்லியப்படுத்தப்பட்ட வலைத்தள வடிவமைப்புகள்(Website Structure), பட்டியல்கள், தரவு மேலாண்மை அமைப்புமுறைகள், படங்கள்(Image), ஒளிக்காட்சிகள்(Video), இணைய விற்பனை கூடைகள், மற்றும் பிற ஆக்கக்கூறுகளை வரையறுக்க பயன்படுத்தப்படுவதாக இருக்கலாம்.

Search Engine Optimization (SEO) - முன்னுரை

வணக்கம் நண்பர்களே, 

நம் SEO மற்றும் Webmasters தமிழ் நண்பர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த வலை பதிவு உருவாக்கப்பட்டுள்ளது. 

Search Engine Optimization - முன்னுரை : 

இன்றைய நவீன உலகத்தில் தொழில் நுட்பம் வெகுவாக வளர்ந்து கொண்டு வரும் வேளையில், இன்டர்நெட் என்பது இன்றியமையாத சக்தியாக உருமாறி உள்ளது. 

Search Engine ( வலை தேடல் ) மூலம் நம் தேடலை ஒரு இடத்திலே பூர்த்தி செய்யலாம். Google அந்த வலை தேடலில் முதன்மையாக உள்ளது. 

SEO என்பது ஒரு வலை தேடல் இயந்திரத்தில் நம் வெப்சைட் முதன்மையாய் வருவதற்காக அந்த வெப்சைட்-ல் Search என்ஜின்-கு ஏற்ப தேவையான முறைகளை மாற்றி அமைப்பது ஆகும். இன்று அனைத்து கம்பெனிகளும் இந்த அணுகு முறையே பயன்படுத்தி வருகின்றனர். 

SEO மற்றும் Internet மார்க்கெட்டிங்-ஐ பற்றி இந்த ப்ளாக்-ல் விரிவாக பார்க்கலாம்.
உங்களின் ஆதரவால் இந்த வலை பதிவு உருவாகக பட்டுள்ளது. 

நன்றி

அன்புடன்
அப்துல் மாலிக்.