தேடுபொறி ( சர்ச் என்ஜின் ) அல்லது தேடற்பொறி என்பது ஒர் Computer Program. Internet-ல் குவிந்து கிடக்கும் தகவல்களில் இருந்தோ Computer-யில் இருக்கும் தகவல்களில் இருந்தோ நமக்கு தேவையான தகவலைப்பெற உதவுகின்றது.
பொதுவாகப் Users ஓர் Information சம்பந்தமாக தேடுதலை ஓர் சொல்லைவைத்து தேடுவார்கள். சர்ச் என்ஜின்கள் சுட்டிகளைப் பயன்படுத்தி விரைவான தேடலை மேற்கொள்ளும். சர்ச் என்ஜின்கள் என்பது பொதுவாக இன்டர்நெட் தேடுபொறிகளைஅல்லது இன்டர்நெட் தேடற்பொறிகளையே குறிக்கும். வெறுசில சர்ச் என்ஜின்கள் உள்ளூர் வலையமைப்பை மாத்திரமே தேடும். இன்டர்நெட் தேடு பொறிகள் பல பில்லியன் பக்கங்களில் இருந்து நமக்குத் தேவையன மிகப் பொருத்தமான பக்கங்களைத் தேடித் தரும்.
வேறுசில சர்ச் என்ஜின்கள் செய்திக் குழுக்கள், தகவற்தளங்கள், திறந்த இன்டர்நெட் தளங்களைப் பட்டியலிடும் DMOZ.org போன்ற இன்டர்நெட் தளங்களைத் தேடும். மனிதர்களால் எழுதப்பட்ட இன்டர்நெட் தளங்களைப் பட்டியலிடும் தளங்களைப் போன்றல்லாது சர்ச் என்ஜின்கள் Algorithm Method தேடல்களை மேற்கொள்ளும். வேறு சில சர்ச் என்ஜின்கள் தமது இடைமுகத்தை வழங்கினாலும் உண்மையில் வேறுசில சர்ச் என்ஜின்களே தேடலை மேற்கொள்ளும்.
ஆரம்ப காலத்தில் ASCII முறை கொண்டே தேடு சொற்களை உள்ளிட முடிந்தது. தற்போது Unicode எழுத்துக்குறிமுறையை பல சர்ச் என்ஜின்களும் ஆதரிப்பதால் ஆங்கிலத்தில் மட்டுமல்லாது உலக மொழிகள் அனைத்திலும் அவ்வம் மொழிப்பக்கங்களை தேடிப்பெறக்கூடியதாகவுள்ளது.
No comments:
Post a Comment