Showing posts with label Website. Show all posts
Showing posts with label Website. Show all posts

Saturday, December 13, 2014

(Website) வெப்சைட் பெயர் வந்தது எப்படி? ஒரு சுவாரஸ்யமான பிளேஷ்பேக்! - விகடன்

இன்டெர்நெட் என குறிப்பிடப்படும் இணையத்தையும் அதன் அங்கமான வெப்சைட்ஸ் எனப்படும் இணையதளங்களையும் யாருக்குத்தான் தெரியாது? இணையத்தின் வரலாறு கூட பெரும்பாலானோருக்கு சுருக்கமாக தெரிந்திருக்கலாம். ஆனால், இணையதளங்களுக்கு அந்த பெயர் சூட்டப்பட்டது எப்படி என்ற விவரம் எத்தனை பேருக்கு தெரியும்?

வெப்சைட் என்றதும் இணையத்தின் அங்கமான தனிப்பட்ட இணையதளங்களை எல்லோரும் இயல்பாக புரிந்து கொள்கின்றனர். வெப்சைட் என்பது அவற்றுக்கான இயற்கையான பெயர் போலவும் இருக்கிறது. இருப்பினும் வெப் எனப்படும் வலை உருவாக்கப்பட்ட போது, தனிப்பட்ட பக்கங்களை எப்படி குறிக்கலாம் என விவாதிக்கப்பட்டது.

அப்போது டிம் பெர்னர்ஸ் லீ ( வலையை உருவாக்கியவர்) ஒரு நூதனமான யோசனையை முன் வைத்திருக்கிறார். இப்போது வெப்சைட் என்று அறியப்படும் தளங்களை அவர் சைக்கோ ஹிஸ்டரி என்று குறிப்பிட விரும்பியிருக்கிறார்.
வலைக்கும் உளவியலுக்கும் என்ன சம்பந்தம்? எப்படி இந்த பெயரை அவர் பரிந்துரைத்தார்?

லீயின் இந்த விருப்பத்திற்கு காரணம் அவருக்கு அறிவியல் புனைகதை எழுத்தாளர் ஐசக் அசிமோ மீது இருந்த ஆர்வம்தான். எதிர்காலவியல் சார்ந்த கதைகளுக்காக அறியப்படும் அசிமோ பவுண்டேஷன் கதை வரிசையில், வருங்காலத்தில் நடக்கும் நிகழ்வுகள் பற்றி தொலைநோக்கிலான கற்பனையால் விவரித்திருப்பார். அதில் வரும்  பேராசிரியர் ஹாரி செல்டன், வரலாறு, சமூகவியல் மற்றும் கணிதத்தை கலந்து மக்களின் பழக்க வழக்கங்களை கணிக்கும் முறையை உருவாக்கியிருப்பார். இதைத்தான் சைக்கோஹிஸ்டரி என்று குறிப்பிட்டிருப்பார்.

லீயும் இதே பெயரை வைக்க விரும்பினார். ஆனால், அவருடன் சேர்ந்து விவாதித்தவர்கள் வெப்சைட் என்ற பெயரையே வலியுறுத்தியிருக்கின்றனர். லீயும் அதை ஏற்றுக்கொள்ளவே, வெப்சைட் என்ற பெயர் இணையதளங்களுக்கு சூட்டப்பட்டது.

வலை என்னவாக உருவாகப்போகிறது என தெரியாத காலகட்டத்தில், இணைப்புகளை கொண்டிருக்கும் பக்கங்களுக்கு, டிம் பெர்னர்ஸ் லீ சைக்கோஹிஸ்டரி என பெயர் சூட்ட நினைத்ததை இன்று திரும்பி பார்க்கும் போது வியப்பாகத்தான் இருக்கும்.

வெப்சைட் பெயர் சூட்டப்பட்ட விதம் பற்றிய இந்த சுவாரஸ்யமான பிளேஷ்பேக்கை, லீயின் சகாக்களில் ஒருவரான பிரிட்டன் பேராசிரியர் வெண்டி ஹால் சிநெட்.காம் இணைதளத்திற்கு அளித்த பேட்டியில்  பகிர்ந்து கொண்டுள்ளார்.

இணைய முன்னோடிகளில் ஒருவராக கருதப்படும் ஹால், பிரிட்டனில் தொழில்நுடப்துறையில் செல்வாக்கு மிக்க 100 பெண்களில் ஒருவராக கருதப்படுபவர். 2006ஆம் ஆண்டில் டிம் பெர்னர்ஸ் லீயுடன் இணைந்து இவர் வெப் சயின்ஸ் டிரஸ்ட் எனும் அமைப்பை நிறுவி நடத்தி வருகிறார்.

வெப்சைட்டை வேறு பெயரில் யோசித்து பார்ப்பதே கூட அந்நியமாக தோன்றும் அளவுக்கு இந்த பெயரும் அதன் கருத்தாக்கமும் நமக்கு நெருக்கமாகிவிட்டது.

மாறாக இணையதளங்களை சைக்கோஹிஸ்டரி என்று குறிப்பிட்டிருந்தால் எப்படி இருக்கும் என கற்பனை செய்து பாருங்கள்!

பேராசிரியர் வெண்டி ஹால் பேட்டி: http://www.cnet.com/news/inventor-of-the-web-wanted-to-call-web-sites-psychohistory/

-சைபர் சிம்மன் - 

Thursday, September 23, 2010

தேடல் பொறி உகப்பாக்கம் விளக்கம் - Search Engine Optimization (SEO) Explanation

தேடல் பொறி உகப்பாக்கம் (SEO ) என்பது Search Engine வழியாக ஒரு வெப்சைட்    அணுகப்படும் எண்ணிக்கையை அல்லது அணுகுதலின் தரத்தை மேம்படுத்துவதற்கான செயல்முறையாகும், 


கட்டணம் வசூலிக்கும் தேடுபொறி மார்க்கெட்டிங் (Search Engine Marketing - SEM) மாற்றாக, "இயல்பான" அல்லது கட்டணம் வசூலிக்காத ("ஆர்கானிக்" அல்லது "படிமுறை" முறையிலான) தேடல் முடிவுகளை வழங்குவதன் மூலமாக இது செயல்படுகிறது. 


அடிப்படையில், தேடுபொறிகள்(Search Engine) அளிக்கும் வலைத்தள பட்டியலில் முதலில் தோன்றும் வலைத்தளமே பெரும்பாலான பார்வையாளர்களைப் பெறும். 


SEO நுட்பமானது, குறிப்பாக புகைப்படத்தேடல்(Image Search), உள்நாட்டு தேடல்(Local Search), ஒளிக்காட்சித் தேடல்(Video Search) மற்றும் தொழில்துறை-சார்ந்த சிறப்பு தேடுபொறிகள் போன்றவை உள்ளடக்கிய பல்வேறு விதமான தேடுதல்களை இலக்காக கொண்டிருக்கலாம். இது ஒரு வலைத்தளத்திற்கு வலையில் இருப்பதற்கான இருப்பை ஆழப்படுத்துகிறது. 


"SEO" என்ற சுருக்கெழுத்துக்கள் " தேடல்(Search) பொறி(Engine) உகப்பாக்கிகளைக்(Optimization)" குறிக்கிறது, 


இந்த சொல், வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப உகப்பாக்கத் திட்டங்களைச் செய்யும் தொழில்துறை ஆலோசகர்களாலும், இந்த SEO சேவைகளைச் செய்துவரும் பணியாளர்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. 


SEO Webmasters இந்த SEO சேவையை ஒரேயொரு தனிச்சேவையாகவோ அல்லது ஒரு பரந்த Marketing உத்தியின் ஒரு பாகமாகவோ அளிக்கிறார்கள். ஏனென்றால் துல்லியமான ஒரு SEO சேவைக்காக வலைத்தளத்தின் HTML Program - மாற்றி அமைக்க வேண்டியதிருக்கும், SEO உத்திகளானது, வலைத்தள உருவாக்கம்(Website Design) மற்றும் வடிவமைப்பு (Development) ஆகியவற்றுடனும் உள்ளடங்கி இருக்கிறது. 


"தேடுபொறிக்கு உகந்தது(Search Engine Friendly)" என்ற இந்த வார்த்தையானது, தேடுபொறியை முழுமையாக பயன்படுத்தும் நோக்கத்திற்காக துல்லியப்படுத்தப்பட்ட வலைத்தள வடிவமைப்புகள்(Website Structure), பட்டியல்கள், தரவு மேலாண்மை அமைப்புமுறைகள், படங்கள்(Image), ஒளிக்காட்சிகள்(Video), இணைய விற்பனை கூடைகள், மற்றும் பிற ஆக்கக்கூறுகளை வரையறுக்க பயன்படுத்தப்படுவதாக இருக்கலாம்.